மட்டக்களப்பில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு.....

 மட்டக்களப்பில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு.....

மட்டக்களப்பு மாவட்டத்தில், சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் கடலுக்கு செல்லவேண்டாம் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதும், சிலரது கவனயீன செயற்பாடுகளால் இளம் வயதினர் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற போதே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பெரியகல்லாறு, பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17வயதுடைய மாணவரே நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மாணவனை தேடும் பணிகளில் கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Comments