ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நலத்திட்ட உதவிகள் நேரடியாக வைப்பு செய்யப்படும்.....

 ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நலத்திட்ட உதவிகள் நேரடியாக வைப்பு செய்யப்படும்.....

ஜூலை மாதம் முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நலன்புரி பயனாளிகளின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பயனாளிகளின் வங்கிக் கணக்கில், தேவையான நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஜூலை முதல், நேரடி பணம் வழங்கும் முறையை சபை அமுல்ப்படுத்தவுள்ளது.

Comments