முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான சேவை நலன்பாராட்டும் பிரிவு உபசார நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில்!
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான சேவை நலன்பாராட்டும் பிரிவு உபசார நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில்!
இந்த நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயராணி தலைமையில் இடம்பெற்றது. தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் நிகழ்வுடன் அரசாங்க அதிபர் மற்றும் அவரின் பாரியார் திருமதி.மதிலதா இருவரும் வரேவேற்று அழைத்துவரப்பட்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபரின் சேவை தொடர்பில் பிரதேச செயலாளரால் பாராட்டுக் கருத்துரை வழங்கப்பட்டது. அரசாங்க அதிபரை கௌரவப்படுத்தும் நோக்கில் வாழ்துப்பாவும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்து மகிழ்விக்கப்பட்டது.
Comments
Post a Comment