நூற்றாண்டு பழமை வாய்ந்த மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம் .....
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் 105 வது வருட திருவிழா கொடியேற்ற நிகழ்வில், புனித செபஸ்தியாரின் திருப்பண்டம் தாங்கிய திருபீடமும் (12) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 105 வருடங்கள் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான, புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குதந்தை அனிஸ்டன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட கூட்டுத்திருப்பலியுடன் நிறைவுபெறவுள்ளது.
புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் 105 வது வருட திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் பங்கு மக்களின் ஏற்பாட்டில், அருட்தந்தை மற்றும் அருட் சகோதரிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஆலய திருவிழா கொடியேற்றம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பங்கு மக்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட புனிதரின் திருப்பண்டம் தாங்கிய திருபீடம் அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
Comments
Post a Comment