மட்டு.மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புகைத்தல்-மது எதிர்ப்பு தின விழிப்புணர்வு செயல் திட்டம்....
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 'புகைத்தலிருந்து மீண்ட ஒரு கிராமம் - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
மாவட்ட சமுர்த்தி திணைக்களப் பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது. புகைத்தல் மற்றும் மது பாவனையால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டதோடு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இத்துடன் மே 31 புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொடி விற்பனையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடமாகும்.
Comments
Post a Comment