ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நோன்பு பெருநாள் கிராமிய கலாச்சார விளையாட்டு விழா!!

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நோன்பு பெருநாள் கிராமிய கலாச்சார விளையாட்டு விழா!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவு நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்திய கிராமிய கலாச்சார விளையாட்டு விழா கடந்த (28) வெள்ளிக்கிழமை காகிதநகர் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்.ஏ.ஆரிபா கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பங்கேற்றார்.
அத்துடன் விசேட அதிதிகளாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய கணக்காளர் எம்.எஸ் பஸீர், ஓட்டமாவடி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், வங்கி முகாமையாளர் பி.எம்.சிஹான், கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களான தலையனை சமர், முட்டி உடைத்தல், தேங்காய் துருவுதல், யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல், சங்கிலி கதிரை போன்ற பல போட்டிகள் இடம்பெற்றதுடன் அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.


Comments