மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் 63வது வருட சாசன தின நிகழ்வு.....

 மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் 63வது வருட சாசன தின நிகழ்வு.....

மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் 63வது வருட சாசன தின நிகழ்வு பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவர் புஞ்சியப்பு ராமணதாஸ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ரோட்டரி மாவட்ட 3220 பொதுச் செயலாளர் குமார் சுந்தரராஜ் மற்றும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் 63வது வருட சாசன தின நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படை வீரர்களின் சேவையினை பாராட்டி சான்றிதழ்களும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் புதிய அங்கத்தவர்கள் இணைத்து கொண்டதுடன் அவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் சூட்டி வைக்கப்பட்டதுடன் அங்கத்தவ சான்றிதழும் இரோட்டரி கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கான அங்கத்தவ அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் 63 வது வருட சாசன தின நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments