மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அணி 58 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது...

 மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அணி 58 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது...

மட்டக்களப்பு மாவட்ட 19 வயதிற்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணிக்கும் கண்டி மாவட்ட அணிக்குமா போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அணி 58 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது.

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் மாவட்டங்களுக்கிடயில் இப்போட்டித் தொடர் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத்தொடரில் மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டங்களுக்கிடையிலான போட்டி கண்டி லேக் வீவ் மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி மாவட்ட 19 வயதிற்குட்பட்ட இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில் 05 விக்கட் இழப்புக்கு 335 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது

இதில் Zainul Hamthy 8 ஓவர்கள் பந்து வீசி வெறும் 38 ஓட்டங்களை விட்டுகொடுத்து தனது கன்னி விக்கட்டைப் பெற்றுக் கொண்டார் .

நன்றி: KKY NEWS

Comments