கூடைப்பந்தாட்ட போட்டியில் சிவானந்தா 45:52 என்கின்ற கணக்கில் வெற்றி....

 கூடைப்பந்தாட்ட போட்டியில் சிவானந்தா 45:52 என்கின்ற கணக்கில் வெற்றி....

காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும், ASCO அமைப்பும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட  போட்டி காரைதீவு  விபுலாநந்த  மைதானத்தில் (06) சனிக்கிழமை கழகத்தலைவர் யா.டிலக்சிகன்  தலைமையில் நடைபெற்றது.

காரைதீவு ௯டைப்பந்தாட்ட அணியினை எதிர்த்து மட்டக்களப்பு சிவானந்தா அணி மோதியது. இதில் காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகம் 45 புள்ளிகளையும், மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் 52 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் வெற்றியை தனதாக்கிக்கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதிகளாக எஸ்.ஜெகராஜன் (பிரதேச செயலாளர் காரைதீவு) கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக சி.நந்தகுமார் (செயலாளர் ASCO), பி.புவனேந்திரராஜா (இணைப்பாளர் ASCO), கே. யோகராஜா (தலைவர்,சிவானந்தா விளையாட்டுக்கழகம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக வி.ரி.சகாதேவராஜா (உதவிக்கல்விப் பணிப்பாளர்), வி.இராஜேந்திரன் (உத்தரவு பெற்ற நில அளவையாளர்),   அஜித் குருப் (இலங்கை கூடைப்பந்தாட்ட அணியின் சிரேஷ்ட பயிற்சிவிப்பாளர்) வி. பாஸ்கரன் (விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக வை.கோபிகாந்த் (தலைவர், ப.நோ.கூ. சங்கம்,காரைதீவு), எஸ்.நேசராஜா தலைவர் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம்) எஸ். அருட்சிவம் (தலைவர்,றிமைன்டர் வினளயாட்டுக்கழகம்) மற்றும் இலங்கை கூடைப்பந்தாட்ட  சம்மேளனத்தின் பிரதிநிதியாக டேனியல் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




Comments