மே 31 சர்வதேச புகைத்தல் வாரம் நாடுபூராவும் இன்று ஆரம்பம்: பணிப்பாளர் தலைமையில் மட்டக்களப்பிலும் இன்று....

 மே 31 சர்வதேச புகைத்தல் வாரம் நாடுபூராவும் இன்று ஆரம்பம்: பணிப்பாளர் தலைமையில் மட்டக்களப்பிலும் இன்று....

மே 31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் நாடுபூராவும்  இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது, மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்ட்டுள்ளது. வருடந்தோறும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இவ் புகைத்தல் எதிர்ப்பு கொடி தினம் கடந்த காலங்களில் கொரோனா காரணமாக நடைமுறை படுத்தப்படாமல் வந்துள்ளது. ஆனால் 2023 ஆகிய  இவ்வருடம் மீண்டும் தொடக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மகளீர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின், சமூக அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட நடாத்தப்படும் இக் கொடி தினத்தின் மகுட வாசகமாக  புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம் எனும் கருத்திட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இக் கொடி தினம் மே 31 தொடக்கம் யூன் மாதம் 14ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதி அக்கிராமங்களில் உள்ள மக்களுக்கே பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











Comments