மட்டக்களப்பில் வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது – 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு....

 மட்டக்களப்பில் வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது – 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு....

மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து திருடிய 14 வயதுடைய சிறுவனும் இளைஞனும், திருட்டு பொருட்களை கொள்வனவு செய்த 4 வர்த்தகர்கள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நான்கு வீடுகள் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் இரண்டு வீடுகளுமாக பூட்டியிருந்த 6 வீடுகளை உடைத்து அங்கிருந்து பணம், தங்க நகைகள், மடிகணணி, மற்றும் மின் உபகரணங்களை திருடிய சிறுவனும் இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்னவின் ஆலோசனைக்கமைய, கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யு.பி. விமலரத்தின தலைமையிலான பொலிசார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்வர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தபடவுள்ளதாக கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Comments