மட்டக்களப்பு சிறைச்சாலையின் சித்திரை புதுவருட நிகழ்வு - 2023
தமிழ் சிங்கள சித்திரை வருட பிறப்பினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின் நிர்வாகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கைதிகள் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சித்திரை புது வருட நிகழ்வானது மிக விமர்சையாக இடம் பெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைதிகளுக்கான கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டி நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் கைதிகளுக்கான நலன்புரிச் சங்கத் தலைவர் P.சடாற்சரராஜா உள்ளிட்ட கைதிகள் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த நான்கு வருடங்களாக இடம் பெறாது இருந்த இந்நிகழ்வு இம்முறை சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கைதிகள் மிக உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கு பற்றியதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசீல்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment