கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை ஜூன் மாதம் 12ம் திகதி திறக்கப்படுகிறது.....

 கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டு வழிப்பாதை ஜூன் மாதம் 12ம் திகதி திறக்கப்படுகிறது.....

கதிர்காம பாத யாத்திரைக்கான குமண காட்டு வழிப்பாதை ஜுன் 12ம் திகதி திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.எ.டக்ளஸ் தெரிவித்தார்

யாத்திரை தொடர்பாக உகந்தை முருகன் ஆலயத்தில் லாகுல பிரதேசசெயலாளர் என்.நவனீதராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆலய வண்ணக்கர் எம்.டி.சுதுநிலமேயின் பங்களிப்போடு இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டஅரசாங்க அதிபர் ஜே.எம்.எ.டக்ளஸ் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், லாகுகல பிரதேச செயலக அதிகாரிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இவ்வருடம் சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொலித்தீன் பாவனை மற்றும் சிறிய தண்ணீர் போத்தல்களைக் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலாசார ஆடையுடன் மாத்திரம் யாத்திரையில் கலந்துகொள்ளவேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கதிர்காம பாதயாத்திரைக்கான குமண ஊடான காட்டுவழிப்பாதை ஜுன் 12ம் திகதி காலை உகந்தைமுருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ம் திகதி மூடப்படும் எனவும் இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாத யாத்திரிகர்களுக்கான பாதுகாப்புஇ சுகாதார சேவைகள்இ குடிநீர் வசதிபோன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குடிநீரை வழங்க லாகுகல பிரதேசசெயலகத்தின் வழிகாட்டலில் சிவதொண்டர் அமைப்பு மற்றும் தம்பிலுவில் சைவநெறி கூடம் உள்ளிட்ட அமைப்புக்கள் பொறுப்பேற்றனர். பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments