115 வது திருவிழாவை கொண்டாடிய நாவற்குடா சின்ன லூர்து ஆலயம்.......

 115 வது திருவிழாவை கொண்டாடிய நாவற்குடா சின்ன லூர்து ஆலயம்.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரசித்திபெற்ற திருத்தலங்களில் ஒன்றான  நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தின் 115வது ஆண்டு திருவிழா திருப்பலி கல்முனை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை தேவதாசன் அடிகளாரின் கூட்டுத்திருப்பலியுடன் நடைபெற்றது.

நாவற்குடா சின்ன லூர்து சிற்றாலயம் 1908ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயமாகும், 1909ம் ஆண்டளவில் அருட்தந்தை I.ஆராஸ் (யே.ச) அவர்களுக்கு  திரேவூ என்ற இடத்துக் கார்மேல் கன்னியர்களால் ஒரு அழகான லூர்து அன்னையின் சொரூபம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த அந்த சுரூபம் நாவற்குடா சிற்றாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

1960ம் ஆண்டிலே, அருட்தந்தை பிளசிடஸ் சில்வா அவர்களால் லூர்து அன்னைக்கு ஒரு கெவியை நிர்மாணிக்க ஆரம்பித்து, 1963ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ம் திகதி, தந்தை பீலிக்ஸ் கிளாக்சன் (யே.ச) அவர்கள் கெவிக்கான அடிக்கலை ஆசீர்வதித்து பதித்து கட்டிட வேலைகளை மூன்று வருடங்களுக்குள் முடித்தார். 1966-02-11ஆம் திகதி புதிய கெவி ஆயர் கிளெனி ஆண்டகையினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டதுடன் மாதாவின் ஆசீநீரும் மக்களின் பினி தீர்க்கும் நீராக மாற பிரான்ஸ் தேசத்தில் லூர்து மாதா ஆலயத்தில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு புதிதாக கிணறு அமைக்கப்பட்டு இக்கிணறுக்குள் இப்புனித நீரை ஊற்றி அதையும் திறந்துவைத்து, தந்தை பிளசிடஸ் கெவிக்கு 'சின்ன லூர்து' என நாமஞ் சூட்டி, நாடு முழுவதிலுமிருந்து, பெருந்திரளான  சிங்கள, தமிழ் யாத்திரிககர்கள் வந்து தங்கி செல்லும் ஒரு புண்ணியஸ்தலமாக நாவற்குடாவை மாற்றியது. 

1994ஆம் ஆண்டு அருட்பணி. D.சாமிநாதன் அடிகளார் நாவற்குடாவில் அன்னைக்கு புதிதாக ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என கூறி அதற்கான நிதியை மக்களிடம் இருந்து திரட்டலாம் என ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதன் பின் 2003ம் ஆண்டளவில் அருட்பணி. B.A.ஜோசப் அவர்கள் ஆலய கட்டிடத்திற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பித்ததுடன் புதிய ஆலயத்திற்கான அடிக்கலினை அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாநில ஆயர் அதிவந்தனைக்குறிய கலாநிதி ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்ககால் ஆலயத்திற்கான அடிக்கல் 2008.12.08ம் திகதியன்று நாட்டப்பட்டது.

2011ம் ஆண்டு பங்குத்தந்தையாக அருட்பணி X.I.ரஜீவன் அடிகளார் அவர்கள் வருகை தந்ததன் பின்னர் ஆலயத்தில் மாதாவின் ஆசி நீர் கிணறு தூர்வாங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது, சேமக்காலையில் மாதாசுருவம் ஸ்தாபிக்கப்பட்டது, மாதாவின் கெவி புதுப்பிக்கபட்டு பீடத்திற்கு மாபில் பதிக்கப்பட்டு, சில்வர் கிராதி அடிக்கப்பட்டது, சிலுவைபாதை செய்வதற்காக சிலுவைகள் நாட்டப்பட்டதுடன், ஆலயத்திற்கான மதில்கள் அமைக்கப்பட்டது மற்றும் சேமக்காலையில் மதில்கள் அமைக்கப்பட்டு பீடமும் தாபிக்கப்பட்டது.  பல அருட்பணியாளர்களின் எண்ணமும் பங்கு மக்களின் கனவாகிய ஆலய கட்டுமாண பணிகளை அருட்பணி X.I.ரஜீவன் அடிகளார்  11.02.2014ம் தொடங்கினார். கட்டுமாண பணிகள் தொடங்கப்பட்டு சரியாக 309 நாட்களில் மிகப்பிரமான்டமான  ஆலயத்தை கட்டி முடித்துள்ளார் .

இவ்வாலயத்தை 16.12.2014 காலை 7.00 மணிக்கு அபிசேக திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆன்டகை  அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாலயம் 2023ம் ஆண்டு  தன் 115வது ஆண்டு நிறைவை கொண்டாட மே மாதம் 05ம் திகதி பங்குத்தந்தை தேவதாஸ் அடிகளாரால் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14ம் திகதி திருவிழா திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது.

 இதன் போது திருவிழா திருப்பலியை கல்முனை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை தேவதாஸ் அடிகளாருடன், நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தின் பங்குத்தந்தை யேசுதாசன் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தத்தந்தை அலன் அவர்களினால் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதன் போது அருட்தந்தையர்களுக்கு 115வது ஆண்டு நிறைவையோட்டி நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.









Comments