KSV மைதானத்தில் நவீன உடற்பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் மலிங்கவால் நடப்பட்டது.....
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தில் பயிற்சி பெறும் கோட்டைமுனை விளையாட்டு கழக வீரர்களுக்கும், EPP இளம் வீரர்களுக்குமான உடல் வலிமையையும், மனவலிமையையும் வளப்படுத்தும் நோக்குடன் நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல் (21) அன்று புதிதாக மட்டக்களப்பில் வீரர்களை உருவாக்க கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக கடமையேற்றுவுள்ள மலிங்க சுரப்புலி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அன்மையில் தன் கடமைகளை பொறுப்பேற்ற மலிங்க சுரப்புலி, நம் வீரர்கள் விளையாட்டில் மிக பலமாக திகழ வேண்டுமென்றால், அவர்களுக்கு முதலில உடல்வலிமை மற்றும் மனவலிமை முக்கியமானதாகும், இப்பணிக்காக தமக்கு முதலில் இம்மைதானத்தில் நிரந்தரமாக ஒரு உடல் பயிற்சி நிலையத்தை அமைத்து தருமாறு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர் புவனசிங்கம் வசீகரன் அவர்களிடம் கோரி இருந்தார்.
இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அமைக்கும் நோக்கில் (21) அன்று இவ் நிலையத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர் E.சிவநாதன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர் S.அருள்மொழி மற்றும் செயலாளர் V.வசந்தமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையத்தின் கட்டுமான பணிகள் இரண்டு மாதங்களில் முடிவுறுத்தப்பட்டு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் பொருத்தப்பட்டு இவ் உடல் பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகள் மிக சொற்பகாலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வீரர்கள் மற்றும் EPP அக்கடமி சிறார்கள் பயன்பெறுவார்கள் பணிப்பாளர் நாயகம் புவனசிங்கம் வசீகரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் முதல் புற்தரை மைதானத்திற்கு வித்திட்ட கோட்டைமுனை விளையாட்டு கிராமம் தற்போது நம் மண்ணின் வீரர்களின் உடல் வலிமையையும் மனவலிமையையும் உயர்த்த புதுக்களம் அமைத்து வருகின்றது என்றால் எல்லாப்புகழும் மட்டக்களப்பிற்கே! வளர்ப்போம் வளப்படுத்தவோம்.....
Comments
Post a Comment