மட்டு மாவட்ட செயலகத்தின் சித்திரை வசந்தத்தில் ஒரு அனுசரனையாளராக வலம் வரும் KSC.....

 மட்டு மாவட்ட செயலகத்தின் சித்திரை வசந்தத்தில் ஒரு அனுசரனையாளராக வலம் வரும் KSC.....

2023ம் ஆண்டிற்கான சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வையும், கலை நிகழ்வுகளும், இசை நிகழ்வுகளும் மற்றும் உற்பத்தி சந்தை விற்பனைகளையும் எதிர்வரும் 30.04.2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை வெபர் மைதானத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரச அதிபருமான கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வானது மாவட்ட செயலகம், பொலிஸ் திணைக்களம், இராணுவம் மற்றும் பாடுமீன் லயன்ஸ் கழகம் இணைந்து நடாத்தவுள்ளது.

இக்கலை நிகழ்வுக்கு ஒரு அனுசரனையாளராக கோட்டைமுனை விளையாட்டு கழகமும் இணைந்துள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

(30)ம் திகதி அன்று நடைபெறும் இவ்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களான முட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் போட்டி, சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், தோணி ஓட்டம், யாணைக்கு கண் வைத்தல், சாக்கோட்டம் போன்றவற்றுடன் புதுவருட ஆணழகன் போட்டி, புதுவருட அழகுராணி போட்டிகள் என்பன நடைபெறவுள்ளதுடன், மாலை நேரத்தில் பரிசளிப்பு நிகழ்வும், மட்டக்களப்பு சுப்பர் சங்கீத் இசைகுழுவின் கான மழை நிகழ்வும இரவு 11 மணிவரை நடைபெறவுள்ளது. 

 50வது வருட நிறைவை கொண்டாடும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் இப்பிரம்மாண்டமான நிகழ்வில் ஒரு அனுசரனையாளராக இருப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.


Comments