சமூக அமைப்புக்களுக்கு உதவிடுவோம்! KSCயின் நடைபவணியில் ஒன்றினைவோம்: மறந்திட வேண்டாம் நாளை 29...
கோட்டைமுனை விளையாட்டு கழகம் தனது 50வது நிறைவை ஒரு வித்தியாசமான முறையில் முதல் நிகழ்வை ஆரம்பிக்க உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும்; 03 சமூக அமைப்புக்களான ஹரி இல்லம், ஓசானம் இல்லம் மற்றும் உதயம் விழப்புனர்வு அற்றறோர் அமைப்புக்களுக்கு உதவும் நோக்குடனும், மட்டக்களப்பில் தன் 50வது ஆண்டை நினைவு படுத்தும் பெயர் பலகையை கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா திறந்து வைத்தும், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்குமான ஒரு முன்மாதிரியான நடைபவணியை பிள்ளளையாரடிய தழிழ் சங்கத்திற்கு முன்பாக ஆரம்பித்து மட்டு நகர் காந்தி பூங்காவை வந்து சந்திக்கவுள்ளது கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50 வது வருட முதல் நிகழ்வானது.
இந்நடைபவணியில் எமது கழக 50வது வருட கடந்த கால நினைவு எண்ணங்களை நினைவூட்டும் பதாதைகளுடன் வாகனங்கள் பவணி வர, எதிர்காலத்தில் மட்டக்களப்பில் இருந்து ஒரு வீரர் தேசிய மட்டத்திற்கு செல்லும் பாதையின் சுழற்சி வட்டத்தின் எண்ணக்கருக்களை பிரதிபலிக்கும் வாகனங்களும் அணிவகுக்க, இலங்கை மண்ணின் இசை வடிவமான பம்பரே இசை கோர்வை ஒவ்வொரு நாற்சந்திகளிலும் ஒலிக்க, மட்டக்களப்பு மண்ணில் 50 வருடத்தை தாண்டி முன்னோக்கி பயனிக்கும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நினைவு சின்னங்கள் வழங்கப்படுவதுடன், போதையற்ற சமூகம் வளர வேண்டும் எனும் தூர நோக்கு சிந்தனையுடன் வாகனங்களுக்கான ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டும். இந்நடைபவனி முன்னோக்கி சென்று காந்தி பூங்காவை சென்றடையும்.
எமது இவ்வாறான தூர நோக்கு ஒரு முன்மாதியாக இருக்க வேண்டும் எனும் என எமது கழகத்தின் மூத்த உறுப்பினர்களின் சிந்தனை, இளையோரை இன்றிலிருந்தே ஆளுமை மிக்கவர்களாக மாற்றுவதுடன் தூர நோக்கு சிந்தனையில் மாற்ற வேண்டும் என்பது தான். இருந்த போதிலும் எமது நிதி சேகரிப்பானது ஜந்து லட்சத்தை தொட வேண்டும் இதற்காக வெளிநாடுகளில் வாழ்வோர், நம்மூரில் வாழ்வோர் உதவுவார்கள் என்பது எமது எண்ணம் இது உறுதியாக வேண்டும். நல்லது செய்ய எண்ணியுள்ளோம் நல்லதே நடக்கும்.
29ம் திகதி நாளை 12 மணிக்கு நடைபவணி முடிவுறும் போது மொத்தமாக சேகரிக்கப்படும் தொகை எம்முடன் பவணியில் பயணிக்கும் டிஜிடல் வானகத்தில் வெளிப்படையாக காண்பிக்கப்பட்டு குறித்த 03 அமைப்புக்களின் இயக்குனர்களின் கைகளில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களால் வழங்கப்படவுள்ளது.
இது ஒரு சம்பவமாக அல்லாமல் சரித்திரம் வாய்ந்த வரலாறாக மாற்ற அணைவரும் ஒன்றினைவோம்!
கோட்டைமுனை நாமம் உலகெங்கும் பரவட்டும்
கோட்டைமுனை மட்டக்களப்பின் ஓர் அடையாமாக திகழட்டும்.
Comments
Post a Comment