பொதுவாக நான் அரசியலைப் பற்றி அதிகம் பேசுவதில்லை, ஏனென்றால் எனக்கு அரசியல் பற்றி தெரியாது – மலிங்க சுரப்புலிகே

 பொதுவாக நான் அரசியலைப் பற்றி அதிகம் பேசுவதில்லை, ஏனென்றால் எனக்கு அரசியல் பற்றி தெரியாது – மலிங்க சுரப்புலிகே

எனது சிந்தனை  எல்லாம் கிரிக்கெட் விளையாட்டையே குறியாக கொண்டுள்ளது இதனால் நான் வேறு எதையும் சிந்திப்பது இல்லை அதைப்பற்றி நான் பேசிக்கொள்வதும் இல்லை. இதனால் தான் நான் அரசியலைப்பற்றி அதிகம் பேசுவதில்லை  ஏனென்றால் எனக்கு அரசியல் பற்றி தெரியாது என அன்மையில் மட்டக்களப்பில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் ஊடாக புதிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட மலிங்க சுரப்புலிகே தனது முகநூலில் பதிவிட்டு தனது கவலையை தெரிவித்துள்ளார்.
 மேலும் அந்த முகநூலில் அவர் தெரிவிக்கையில்  தனக்கு அரசியலைப்பற்றி தெரியாததால் தான் அரசியலை பேசுவது இல்லை என்றும் இந்த அரசியல்வாதிகளால் இந்த நாடு அடைந்த பின்னடைவை தாம் அறிவதாகவும் தெரிவித்து, பல வருடங்களாக இலங்கை திருநாட்டில் வாழும் தமிழ், சிங்கள மக்கள் தம்மொழிகளை விட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மூன்றாம் மொழியான ஆங்கில மொழியை பேசிக் கொள்வது தமக்கும் இன்று வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் எனக்கும் இந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளது எனவே நமது பயணமானது  ஒரு குறுகிய வருட கால பயணமாகும். நாம் அனைவரும் ஒன்றினைந்து ஒருவருக்கொருவர் புரிந்துனர்வுடன் செயற்பட்டு நம் சொந்த மண்ணில் கிரிக்கெட் விளையாட்டை வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம்.

 இவ்விடயத்தை நம் பெரும்பாலானோர் தம் வாழ்நாளில் தவறவிட்டு விட்டனர் இதை நாம் மாற்றியமைப்போம் என தெரிவித்துள்ளார்.


Comments