கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிமான விற்பனை சந்தை.....

 கோரளைப்பற்று  பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிமான விற்பனை சந்தை.....

சமுர்த்தி அபிமான சந்தையும் விற்பனையும் கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.J.திருச்செல்வம் தலைமையில் (10)ம் திகதி பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விற்பனையும் கண்காட்சி நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கோரளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி.K.அமலினி, கணக்காளர் J.A.அனந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் R.கெங்காதரன், நிர்வாக உத்தியோகத்தர் R.பாஸ்கரன் மற்றும் மாவட்ட சமுர்த்தி பிரிவின் சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இதன் போது கோரனைப்பற்று சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி B.தேவமனோகரி. சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்த கொண்டனர்.












Comments