அகிம்ஷா நிறுவனத்தினால் பயனாளி ஒருவருக்கு வீடு கையளிக்கப்பட்டது.....

 அகிம்ஷா நிறுவனத்தினால் பயனாளி ஒருவருக்கு வீடு கையளிக்கப்பட்டது.....

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் சிபாரிசுக்கு அமைய கிராம சேவையாளர் ஊடாக ஏறாவூர் பற்று மாவடி வேம்பு-2 கிராம சேவையாளர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பயனாளியான சிவசம்பு ரவிச்சந்திரன் என்ற பயனாளிக்கு அகிம்ஷா நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது.

அஹிம்ஷா நிறுவனத்தின் தலைவர் விஜயராஜா தலைமையில் சமய வழிபாடுகளுடன் இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில், அதிதிகளாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன், கனடா ஐயப்பன் இல்ல உறுப்பினரான தங்கேஸ்வரி, அகிம்சா நிறுவன நிதிக்குழு உறுப்பினர் விநாயகமூர்த்தி ஜீவராஜா ஆகியோர் கலந்து கொண்டு வீட்டினை திறந்து வீட்டுக்கான ஆவணம் வீட்டுக்கான தளபாடங்களை கையளித்தனர்.

இந்நிகழ்வில் அஹிம்ஷா நிறுவனத்தின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Comments