சமுர்த்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் வவுனதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.......
மட்டக்களப்பு வவுணதீவு புதுமண்டபத்தடி – தாண்டியடியில். சமுர்த்தி வர்த்தககண்காட்சியும் விற்பனை சந்தையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மண்முனை மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களைக் கொண்டதாக, இச் சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மண்முனை மேற்கு சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தங்கத்துரை தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. உள்ளூர் வியாபாரிகள் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் 'அரணலு' நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக விற்பனை செய்யப்பட்டன. இவ்வர்த்தக கண்காட்சியில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment