கல்லடி பாலத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி.....

 கல்லடி பாலத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி.....

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில், மாவட்ட பெண்கள் வலையமைப்புக்களுடன் இணைந்து உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு நீதி கோரி, மாவட்ட பெண்கள் வலையமைப்பினர், சமய தலைவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்ப உறவுகளினால் மனிதச் சங்கிலி கண்டன போராட்டம் ஒன்றும் முன்னெடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments