மீள் உருவாக்கம் செய்யப்பட்ட சிவானந்தா மாணவ விடுதியில் புதுவருட கொண்டாட்டம்....
மீளவும் ஆரம்பிக்கப்பட்ட சிவானந்த வித்தியாலய விடுதி மாணவர்களின் 2023ம் ஆண்டுக்கான புதுவருட கொண்டாட நிகழ்வுகள் நீண்டகாலத்தின் பின்னர் இடம்பெற்றது.
இதில் அதிதிகளாக சிவானந்தா பாடசாலையின் பிரதி அதிபர் திரு. தயாபரன், உதவி அதிபர் திரு.மணிவண்ணன், பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. வாசுதேவன், பிரித்தானிய கிளையின் சார்பில் திரு.சுந்தர்ராஜா, பிரித்தானியவில் இருந்தது வருகைதந்த திரு.உமாச்சந்திரா, பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பட்ட முன் மாணவர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை குறுகிய காலத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விடுதியில் தற்போது சுமார் 32 மாணவர்கள் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இக் குறுகிய காலத்தில் விடுதியின் முன்னேற்றத்தில் பாரிய பங்களிப்பினை வழங்கிய அதிபர், உதவி அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையினருக்கு நன்றிகளை தெரிவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் சிற்றூண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment