ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு....
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை வாவிப்பகுதியில் முதலையினால் பிடிக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அப்பகுதி மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியைசேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய அமரசிங்கம் ஜெயச்சந்திரன் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
Comments
Post a Comment