மட்டக்களப்பில் சமுர்த்தி பயனாளிகளில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவிக் கொடுப்பனவு!!

 மட்டக்களப்பில் சமுர்த்தி பயனாளிகளில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவிக் கொடுப்பனவு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேசத்தின் பிரைந்துரைச்சேனை 206A, 206C கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமுர்த்தி பெறும் முதியோர்களுக்கான 2 மாத முதியோர் கொடுப்பனவும், சமுர்த்தி பெறாத முதியோருக்கான 3 மாத மேலதிக கொடுப்பனவுடன் கூடிய முதியோர் கொடுப்பனவும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.சி.சாதிக்கீன் அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.
இதற்காக 83 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அதில் 76 பேரில் சமுர்த்தி முத்திரை இல்லாதவருக்கு 12,800 ரூபாவும் சமுர்த்தி முத்திரை உள்ளவர்களுக்கு 3800 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சமூக சேவைப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.நிலூஜா, எம்.ஏ.எம்.இல்யாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




Comments