அமரர் இராஜேந்திரம் அவர்களின் ஆனந்த ராகங்கள் கவிதை நூல் வெளியீடு.....

 அமரர் இராஜேந்திரம் அவர்களின் ஆனந்த ராகங்கள் கவிதை நூல் வெளியீடு.....

மகுடம் கலை இலக்கிய வட்டம்  அமரர் ஆனந்தா A.G.இராஜேந்திரம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவை முன்னிட்டு மகுடம் பதிப்பகத்தின் 69வது வெளியீடாக ஆனந்தாவின் ஆனந்த ராகங்கள் கவிதை நூல் வெளியீடானது அன்மையில்  மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி  அகுஸ்தின் நவரட்ணம் அடிகளாரின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்வெளியீட்டு நிகழ்வில் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரின் இறை ஆசிருடன் ஆரம்பமானது.  வரவேற்புரையை செல்வி மெற்றில்டா ராஜேந்திரம் உரைத்திட  நூல் வெளியீட்டுரையை மகுடம் வி.மைக்கல் கொலினும் ஆற்ற, கவிதை நூலின் முதல் பிரதியை திருமதி ராஜேந்திரம் அவர்கள் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாருக்கு வழங்கி வைத்தார்.

நூல் தொடர்பான அறிமுகவுரையை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்  ரூபி வலண்டினா பிரான்சிஸ் அவர்களும், அமரர் ஆனந்தா A.G.ராஜேந்திரம் தொடர்பான  சிறப்புரையை  புளியந்தீவு வின்சன்ட் டீ போல் சபை தலைவர் இக்னேசியஷ் சில்வெஸ்டர் அவர்கள் வழங்கி இருந்தார். இந்நிகழ்வில் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.











Comments