மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிமானி கண்காட்சி......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வருடந்தோறும் நடைபெற்றுவரும் சமுர்த்தி அபிமானி உற்பத்தி விற்பனை கண்காட்சி மட்டக்களப்பு யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில் 10ம் 11ம் திகதிகளில் இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். இக்கண்காட்சியில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றிருந்தது. தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இவ்விற்பனை கண்காட்சி நாடு பூராவும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் க.பரமலிங்கம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் வசந்தா தேவி உதயகுமார், சமுர்த்தி முகமைத்து பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்த கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment