மட்டக்களப்பில் மாற்றுத் திறனாளிகள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு.....

 மட்டக்களப்பில் மாற்றுத் திறனாளிகள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு.....

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வீட்டு தோட்ட ஊக்குவிப்புக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.எ.நிறுவனம், சி.பி.எம்.நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மாவட்டத்தில் 8 பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டங்கள், பொருளாதார சுயதொழில் வீட்டுத்தோட்ட விவசாய ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய குளங்களையும் புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான வீட்டுத்தோட்ட விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு வை.எம்.சி.எ.நிறுவன திட்ட உத்தியோகத்தர் அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வை.எம்.சி.எ.நிறுவனத்தின் பதில் பொதுச்செயலாளர் எஸ்.பெற்றிக், சமூக சேவைகள் உத்தியோகத்தர் டிமலேஸ், கிராம சேவை உத்தியோகத்தர் லிங்கேஸ்வரன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மாற்றுத்திறனாளி அமைப்பின் தலைவர், வை.எம்.சி.எ.நிறுவன உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.



Comments