உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு சிரமதானம்......
உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சிரமதான நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரையில் இடம் பெற்றது.
ஏப்ரல் 2ஆம் திகதி உலக ஓட்டிசம் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் ஓட்டிச விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரையினை அண்டிய பகுதியில் சுத்தப்படுத்தும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் உளநல மருத்துவ சேவை ஆலோசகர் வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார், தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலைய அருட்சகோதரர் ஸ்டீபன் மெதிவு, முறைசாரா கல்வி உதவி கல்வி பணிப்பாளர் தயானந்தன், ராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் சமூக நலன் சார் பணியாளர்கள் தீரனியம் திறந்த பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment