மட்டக்களப்பு கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி திறந்த சிலுவைப்பாதை .......
இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் முக்கிய தினமாகிய பெரிய வெள்ளி கிழமையின் முக்கிய நிகழ்வான திறந்த சிலுவைப்பாதை மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று (07) காலை முதல் நடைபெற்றது.
இவ் திறந்தவெளி சிலுவைப்பாதையில் மக்கள் தாமாக முன் வந்து இயேசு அன்று தன் தோள் மீது சுமந்த சிலுவையை இன்று தம் தோள்; மீது சுமந்து தங்கள் சுமைகளை சுகங்களாக மாற்றினர். ஆலய குருக்களின் வழி காட்டலின் கீழ் மிகவும் சிறப்பாக கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் ஆலயத்திலும், நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்திலும், புளியடிக்குடா புனித செயஸ்தியார் ஆலயத்திலும் இச்சிலுவைப்பாதை எம்மால் அவதானிக்கப்பட்டது.
இதன் போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Comments
Post a Comment