மட்டக்களப்பு காத்தான்குடியில் விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது.....
மட்டக்களப்பு காத்தான்குடி 2ம் குறிச்சி பிரதான வீதியின் மௌலானா குறுக்கு வீதியில் புதிதாக நிகர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இம் மைதானத்தில் உதைபந்தாட்டம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை மேற் கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.காத்தான்குடியைச் சேர்ந்த சல்மா அரிசி ஆலை உரிமையாளர் ரபீக்கினால் நிர்மாணிக்கப்பட்ட இவ் விளையாட்டு மைதானத்தினை, காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் அஸ்பர் திறந்து வைத்தார்.
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், திறப்பு வைபவத்தில் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment