கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் மரணம்...

 கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் மரணம்...

நீண்ட நாட்களுக்குப் பின் கொரோனா தொற்றுக் காரணமாக  மீண்டும்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்  நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார்.




Comments