சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை வாகரை பிரதேச செயலகத்தில்....

 சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை வாகரை பிரதேச செயலகத்தில்....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் சமுர்த்தி அபிமானி விற்பனையும் கண்காட்சியும் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளர் பிரனவன் அவர்களின் தலைமையில் (10) அன்று நடைபெற்றது.

இவ்விற்பனை கண்காட்சியில் சமுர்த்தி பயனுகரிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலக கணக்காளர் சந்திரகலா ஜெயேந்திரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரும் தலைமையக முகாமையாளருமான கலைவாணி, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் அற்புதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Comments