மட்டக்களப்பில் வாய்ச் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பற்பரிசோதனை தொடர்பான செயலமர்வு!!

 மட்டக்களப்பில் வாய்ச் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பற்பரிசோதனை தொடர்பான செயலமர்வு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்பூட்டலும் பரிசோதனையும் தொடர்பான நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
பல் வைத்திய நிபுணர் யாழினி சிறிபரதன் வாய்ச் சுகாதாரம், அதனை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும், வாய்ச் சுகாதாரம் இன்மையால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் நோய்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் பல் சார்ந்த நோய்கள் தொடர்பாகவும் வைத்திய ஆலோசனைகளை வழங்கினார் .
இந்நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நசூர்தீன் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Comments