மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சீயோன் தேவாயலத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபாடுகள்....

 மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சீயோன் தேவாயலத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபாடுகள்....

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சீயோன் தேவாலயத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

சீயோன் தேவாயலத்தில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 85க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து,  சீயோன் தேவாலய பிரதம போதகர் ரொஷான் தலைமையில் விசேட வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments