மட்டக்களப்பு இந்து கல்லூரியில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி.....
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 77வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில், கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது . பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், அணிக்கு 9 பேர் கொண்ட 5 ஓவர்கள் அடங்கிய 11 அணிகளுக்கிடையில் போட்டி நடைபெற்றது.
இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பொது செயலாளர் சசிகுமார் தலைமையில் சுற்றுப்போட்டி நடைபெற்ற இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்லூரி அதிபர் சண்டேஸ்வரர் சர்மா, வலயக் கல்வி அலுவலக உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் லவக்குமார், பழைய மாணவர் சங்க ஆலோசகர் வைரமுத்து பஞ்சலிங்கம், கல்லூரி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment