உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு புனித மிக்கேல் கல்லூரியில்.....
உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி பிரதி அதிபர் அருட்தந்தை மொரிசன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழிப்புணர்வு செயல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான உட்படுத்துகை விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு தீரனியம் திறந்த பயிற்சி பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல், தீரனியம் பாடசாலையின் உளநல மருத்துவ ஆலோசகர் வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார், அருட்சகோதரர் ஸ்டீபன் மெதிவு ஆகியோரின் வழிநடத்தலில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment