பெண்ணிலைச் செயற்பாட்டாளரும், ஓவியருமான கமலா வாசுகியின் ஓவிய கண்காட்சி.....
பிரபல பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளரான கமலா வாசுகியின் 'கடந்து வந்த காலத்தைப் பார்த்தல்' எனும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி இன்று 05ஆந் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆந் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள லேடிமனிங் டிறைவ் – கல்லடி புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ள வாவிக்கரை வீதி எனும் முகவரியில் இக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
ஒரு பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளராகக் கடந்த மூன்று தசாப்த காலமாகத் தான் எதிர்கொண்ட அனுபவங்களை ஓவியக் கலையாக்கங்களுடாக வெளிக்காட்டும் கலைத் தொகுப்பாக இக்கண்காட்சி இடம்பெறுகின்றது.
பெருமளவானவர்கள் இக் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment