மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளில் கைவிசேடம்!
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு, கல்லடி, இருதயபுரம் கிழக்கு ஆகிய சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்களுக்கான கைவிசேட கொடுக்கல், வாங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன.
2023 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டு இந் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் S.புவனேந்திரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன், மாவட்ட சமுர்த்தி பிரிவின் சிரேஸ் முகாமையாளர் J.F.மனோகிதராஜ், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment