பாக்குநீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில், மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன் மதுசிகன்....
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனான இளம் நீச்சல் வீரர் தவேந்திரன் மதுசிகன், எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி வியாழக்கிழமை பாக்குநீரிணையினை நீந்திக் கடக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். கடலில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்பாவனை, தற்கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற மூன்று தொனிப் பொருளை முன் வைத்தே குறித்த மாணவன் பாக்குநீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
தனது பாடசாலையின் 150வது ஆண்டு பூர்த்தியை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து மூன்று விடயங்களை முன் வைத்து இம்முயற்சியில் இம் மாணவன் ஈடுபடவுள்ளார்.
Comments
Post a Comment