மட்டு.ஈச்சந்தீவு இராமகிருஸ்ண மிசன் தமிழ் வித்தியாலய விளையாட்டுப் போட்டி......

 மட்டு.ஈச்சந்தீவு இராமகிருஸ்ண மிசன் தமிழ் வித்தியாலய விளையாட்டுப் போட்டி....

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு ஈச்சந்தீவு இராமகிருஸ்ண மிசன் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு போட்டி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில்,  பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதி கல்விப் பணிப்பாளர்களான ஜெயச்சந்திரன் மற்றும் மகேந்திர குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் அணி நடை, திறனாய்வு விளையாட்டுக்கள் மணவர்களின் உடற்பயிற்சி, வினோத உடை மற்றும் ஆசிரியர்கள், ஆகியோரின் வினோத விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டன.

Comments