சமுர்த்தி சௌபாக்கியா விசேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீடுகள் கையளிக்கும் நிகழ்வு......
சுபீட்சத்தின் நோக்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சமுர்த்தி சௌபாக்கியா விசேட வேலைத் திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக, சமுர்த்தி சௌபாக்கிய விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டு வருகின்றன.
மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் திருப்பெருந்துறை கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் S.புவனேந்திரன், சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ், ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான வீடுகளைக் கையளித்தனர்
இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாக உதயகுமார் வசந்தா தேவி, வங்கி முகாமையாளர் மணிவண்ணன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.அருணாகரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment