மட்டு.மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் தடகள விளையாட்டு போட்டி வித்தியாலய அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் அணி நடை, விளையாட்டுக்கள் மணவர்களின் உடற்பயிற்சி, வினோத உடை போட்டி மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள்
ஆகியோரின் வினோத விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
விளையாட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment