மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் பேரிச்சம் பழங்கள் வழங்கப்பட்டன
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நோன்பு துறப்பதற்கான பேரிச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்து கொண்டு பேரிச்சம்பழ விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார். ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ வீதம் 650 குடும்பங்களுக்கு பேரிச்சம் பழங்கள் வழங்கப்பட்டன.
பேரிச்சம் பழங்கள் சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு தனவந்தர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்வில் அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் செயலாளர், கிராம உத்தியோகத்தர், பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment