மட்டக்களப்பு மாவட்ட படப்பிடிப்பு உரிமையாளர் சங்கம் மேற்கொண்ட மனிதாபிமான உதவி!!
பண்டாரவளை - கபரகலை பகுதியில் கடந்த மாதம் 19 திகதி ஏற்பட்ட திடீர் மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதற்கட்ட நிவார உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட படப்பிடிப்பு உரிமையாளர் சங்கம் அவர்களது நண்பர்கள் மற்றும் ஈரோஸ் ஆகியோரது அனுசரனையுடன் மாக்கந்தை முகாமிற்கு நேரில் சென்று உதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.
கபரகலை பகுதியில் கடந்த மாதம் 19 திகதி ஏற்பட்ட திடீர் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 75 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட படப்பிடிப்பு உரிமையாளர் சங்கம் நேரில் சென்று குறித்த 75 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்ததுடன், சமைத்த உணவினையும் வழங்கி வைத்துள்ளனர்.
Comments
Post a Comment