காத்தான்குடி ஸிபா முதியோர் பாதுகாப்பு நலன்புரிச் சங்கத்தால் உலருணவுப் பொருட்கள் விநியோகம்.....

 காத்தான்குடி ஸிபா முதியோர் பாதுகாப்பு நலன்புரிச் சங்கத்தால் உலருணவுப் பொருட்கள் விநியோகம்.....

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஸிபா முதியோர் பாதுகாப்பு நலன்புரிச் சங்கத்தினால் புனித ரமழான் மாத நோன்பை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஸிபா முதியோர் பாதுகாப்பு நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சாந்திமுகைதீன் தலைமையில் சங்க அலுவலகத்தில் வைத்து உலருணவு விநியோகம் இடம்பெற்றது.

60 வயதுக்கு மேற்பட்ட 80 பேருக்கு அரிசி மற்றும் முன்னாள் ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் அன்பளிப்பு செய்த பேரீச்சம்பழமும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி சமூக பராமரிப்பு அலுவலக உத்தியோகத்தர் திருமதி ஹனாதி, ஸிபா முதியோர் பாதுகாப்பு நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments