மட்டக்களப்பு பிள்ளையாரடியில் வாவியோரம் துப்புரவாக்கல்!
மட்டக்களப்பு எகெட் சூழல் பாதுகாப்பு குழு ஏற்பாட்டில் செடெக் நிறுவனத்துடன் இணைந்து, மிசரியர் நிதி அனுசரணையில், 'இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கான படிக்கல்' எனும் தொனிப்பொருளில், பசுமையான உலகை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் செயல்திட்டத்தில் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை துப்பரவு செய்யும் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இன்றைய தினம் உலக நீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நீர்நிலைகளை மாசுப்படுத்தாமல் பாதுகாப்போம், கழிவு பொருட்களை சுகாதார முறைப்படி அகற்றிடுவோம் தொனிப்பொருளுக்கு அமைய மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதிக்கு அண்மித்த பிள்ளையாரடி வாவிக்கரை பகுதியினை மட்டக்களப்பு மாநகர சபையுடன் வை.எம்.சி.ஏ நிறுவனம் இணைந்து துப்புரவு செய்தது.
மட்டக்களப்பு எகெட் சூழல் பாதுகாப்பு குழுவின் திட்ட இணைப்பாளர் ஏ.டி. சொலமனின் ஒழுங்கமைப்பில், எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி ஏ.ஜேசுதாசன் தலைமையில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வாவிக்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மைப்படுத்தும் செயல்திட்டத்தில், மாநகர சபை பிரதி ஆணையாளர் சிவராஜா, சர்வ மத தலைவர்கள், எகெட் நிறுவன உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர், யுவதிகள் என பலர் இணைந்து கொண்டனர்.
Comments
Post a Comment