ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை......
வருடந்தோறும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் சமுர்த்தி அபிமானி விற்பனையும் கண்காட்சியும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் (11) அன்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விற்பனை கண்காட்சியில் சமுர்த்தி பயனுகரிகள் தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டதன் ஊடாக விற்பனையும் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், கணக்காளர் A.டிலானி, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரும் தலைமையக முகாமையாளருமான S.இராசலிங்கம், நிர்வாக உத்தியோகத்தர் N.கோமதி, மேலதிக பதிவாளர் A.புனிதவதி, நிர்வாக கிராம உத்தியோகத்தர் T.லிங்கேஸ்வரன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் S.கலாதேவன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.
Comments
Post a Comment