ஆரம்பமானது சமுர்த்தி சித்திரை புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா....
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடைபெறும் சமுர்த்தி சித்திரை புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா 22ம் திகதியாகிய இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.கடந்த 04 வருடங்களாக கொவிட் தொற்று மற்றும் பல காரணங்களால் தடைப்பட்ட இச்சித்திரை புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா 2023ம் ஆண்டில் மிகவும் சிறப்பான முறையில் இன்று ஆரம்பித்து நடாத்தப்பட்டு வருகின்றது. இவ்விளையாட்டு நிகழ்வானது பல பிரதேச செயலகங்கள் ஊடாக சமுர்த்தி வங்கிச்சங்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் சித்திரை புத்தாண்டின் கிராமிய விளையாட்டு போட்டி நிகழ்வானது பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமமான ஊத்துச்சேனையில் நடைபெற்றது இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இதே போன்று பல பிரதேச செயலகங்களிலும் சமுர்த்தி சித்திரை புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது. இதன் சில தொகுப்புக்கள் கீழே......
Comments
Post a Comment