சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புனித வழிபாட்டு சடங்கு ......
மட்டக்களப்பில் உள்ள மிகப்பெரிய திருத்தலங்களில் ஒன்றான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் வழமை போன்று பரிசுத்த வாரம் அனுஸ்டிக்கப்படுவதுடன், "இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா" எனும் பாஸ்கா நாடகமம் இடம்பெறவுள்ளது.
பெரிய வியாழன் அன்று மாலை 5.00 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு,
07.04.2023 பெரிய வெள்ளி அன்று:
சிலுவைப்பாதைகள் அந்தோனியார் ஆலயத்திலிருந்து காலை 06 மணிக்கும், வீரமுனை சந்தியிலிருந்து 06.00 மணிக்கு ஆரம்பமாகி திருத்தலத்தை வந்தடையும் .
கல்லறையாண்டவரின் திருச்சுரூபம் பக்தர்களின் நேர்த்திக்காக பெரிய வியாழன் அன்று காலை 06.00 மணி தொடக்கம் மாலை 4.30 வரையும், மற்றும் பெரிய வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை நிறைவடைந்ததும் கல்லறையாண்டவரின் திருச்சுரூபம் வெளியில் எடுத்து வைக்கப்படும்.
மாலை 3.00 மணிக்கு முத்தி செய்யும் வழிபாடு ஆரம்பமாகும். பின் மாலை 7.00 மணிக்கு ஆண்டவரின் திருப்பாடுகளின் பாரம்பரிய காட்சிகளும் காண்பிக்கப்படும்.
Comments
Post a Comment